சர்வதேச யோகா தினம்

சங்கரன்கோவிலில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.;

Update: 2022-06-21 11:39 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு பதஞ்சலி யோகா அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. யோகா மாஸ்டர் ஜெயராம் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் யோகா மையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன், மகளிர் அணி செயலாளர் ராஜலட்சுமி, வர்த்தக அணி தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்