சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் டென்னிஸ் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மீண்டும் சென்னையில் சர்வதேச டென்னிஸ் ஓபன் தொடரை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் முதல் முறையாக நடைபெறவிருக்கும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.