சர்வதேச புலிகள் தினம்: வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த தமிழிசை சவுந்தரராஜன்

சர்வதேச புலிகள் தினத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வங்கப்புலிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ரசித்துப் பார்த்தார்.;

Update:2022-07-30 01:18 IST

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டரி வாகனத்தின் மூலம் சென்று பார்வையிட்டார்.

வண்டலூர்,

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2300 விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினம் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று மாலை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்தார்.

பின்னர் கவர்னர் பேட்டரி வாகனம் மூலம் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வங்கப் புலிகள் மற்றும் வெள்ளப் புலிகள் இருப்பிடத்திற்கு சென்றார். அப்போது வங்கப் புலிகள் மற்றும் வெள்ளப் புலிகள் செய்யும் சேட்டைகளை நேரில் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வருகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவாயில் மற்றும் பூங்கா வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Tags:    

மேலும் செய்திகள்