சர்வதேச புலிகள் தினம்: சென்னையில் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;
சென்னை,
சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகின்றது. இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி இந்தியாவில் உள்ள 264 புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்குப் பொருத்தமாக வருகிற அக்டோபர் மாதம் சென்னையில் ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.