பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மாநாட்டில் சுமார் 1 லட்சம் முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-08-24 00:11 GMT

பழனி,

பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார். அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.

மாநாட்டுக்கு வரும் பங்கேற்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு தனித்தனியாக அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுமார் 1 லட்சம் முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பழனியில், உலக அளவில் முருகன் மாநாடு நடப்பதால் பழனியே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்