தமிழகத்தில் முதல் முறையாக மாமல்லபுரத்தில் 'சர்வதேச பட்டம் விடும் திருவிழா'

மாமல்லபுரத்தில் வரும் 13-ந்தேதி ‘சர்வதேச பட்டம் விடும் திருவிழா’ தொடங்க உள்ளது.

Update: 2022-08-11 12:32 GMT

சென்னை,

தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 'சர்வதேச பட்டம் விடும் திருவிழா' நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து 4 குழுக்களும், இந்தியாவில் இருந்து 6 குழுக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த திருவிழாவில் பார்வையாளர்களுக்கென பிரத்யேக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்