சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்

காரைக்குடியில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update: 2023-06-26 19:38 GMT

காரைக்குடி, 

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நேற்று அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கண்ணதாசன் மணிமண்டபத்தில் தொடங்கி 100அடி சாலை வழியாக பெரியார்சிலை, கம்பன் மணிமண்டபத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்திற்கு காரைக்குடி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் நாட்டு நலப்பனித்திட்ட அலுவலர்கள் சுந்தரி, தெய்வமணி, லெட்சுமணகுமார் ஆகியோர் வழிநடத்தினர். ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்