உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத்தடை - ஐகோர்ட் உத்தரவு

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.;

Update: 2022-09-02 20:31 GMT

சென்னை,

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாச மாசிலாமணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் நியமிக்கப்படும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களை, உரிய கல்வி தகுதியின் அடிப்படையில் நேரடி நியமனமாக நியமிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தற்காலிக பணி நியமனத்திற்கு குறிப்பிட்ட பட்டப்படிப்பு அவசியமில்லை என்றும், தற்காலிக பணி நியமனத்தை அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ள முடியாது என்றும் வாதிட்டார்.

இதையடுத்து உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்காலத்தடை விதித்த நீதிபதி, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்