ஒப்பந்த செவிலியர்களுக்கான மகப்பேறு விடுப்புக்கால சம்பளத்தொகையை திரும்ப பெறுவதற்கான உத்தரவுக்கு இடைக்கால தடை

ஒப்பந்த செவிலியர்களுக்கான மகப்பேறு விடுப்புக்கால சம்பளத் தொகையை திரும்ப பெறுவதற்கான உத்தரவுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2023-08-12 11:37 GMT

மதுரை,

ஒப்பந்த செவிலியர்களுக்கான மகப்பேறு விடுப்புக்கால சம்பளத் தொகையை திரும்ப பெறுவதற்கான உத்தரவுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

சிவகங்கையில் தேசிய சுகாதார அமைப்பின் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் சந்தான லட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு அவர் மகப்பேறு விடுப்பில் சென்றபோது 9 மாத காலத்திற்கு சம்பளம் கிடைத்ததாகவும் தற்போது தேசிய சுகாதார அமைப்பு இயக்குனரின் சுற்றறிக்கையில் அந்த தொகையை திரும்ப செலுத்தும்படி கூறுவதாகவும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது வாதிட்ட மனுதாரர் தரப்பு வக்கீல், தேசிய சுகாதார திட்ட இயக்குனரின் அறிவிப்பு சட்ட விரோதமானது என்றார். இதையடுத்து தேசிய சுகாதார அமைப்பின் தமிழக இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, சுகாதாரத் துறை முதன்மை செயலாளர், தேசிய சுகாதாரத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்