செயின்ட் ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள்
செயின்ட் ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.;
திருச்சி அதவத்தூரில் செயின்ட் ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் `ஜோன் பெஸ்ட்- 2022' பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளி முதல்வர் நாகவேணி சந்திரசேகர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 13 விதமான போட்டிகள் நடைபெற்றது. 400-க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். டி.வி. நடிகர் வினோத் பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சந்திரசேகர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் அதவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கொடியரசு மற்றும் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.