3 கோடியில் மண்டல இணை இயக்குனர் அலுவலக கட்டிடம் கட்டும் பணி தீவிரம்

தெற்கு தீயணைப்பு நிலைய வளாகத்தில் 3 கோடியில் மண்டல இணை இயக்குனர் அலுவலக கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

Update: 2022-06-01 14:04 GMT

கோவை

தெற்கு தீயணைப்பு நிலைய வளாகத்தில் ரூ.3 கோடியில் மண்டல இணை இயக்குனர் அலுவலக கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீயணைப்பு நிலையம்

கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீய ணைப்பு அலுவலர் மற்றும் மண்டல இணை இயக்குனர் அலுவலகம் ஆகியவை இயங்கி வருகிறது. இங்கு, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க உதவும் நவீன உபகரணங்கள், மரம் வெட்டும் எந்திர வாள்கள் உள்ளிட்டவை உள்ளன.

இதன் வளாகத்தில் மண்டல இயக்குனர் வளாகம் சிறிய கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாமல் இயங்கி வருகிறது. எனவே நவீன வசதிகள் கொண்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

புதிய கட்டிடம்

அதன்படி ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அங்குள்ள வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் கீழ் தளத்தில் 4 பெரிய தீயணைப்பு வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர அலுவலக பணிக்காக 2 மாடிகளும் கட்டப்பட்டு உள்ளன.

இது குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நவீன வசதிகள்

கோவை மண்டல தீயணைப்பு இணை இயக்குனரின் கீழ் கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர், நீலகிரி உள்பட 9 மாவட் டங்கள் உள்ளன.தற்போது தெற்கு தீயணைப்பு நிலையத்தில் உள்ள பழைய கட்டிடத்தில்தான் மண்டல இணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

எனவே ரூ.3 கோடியில் 2 மாடிகளை கொண்ட தீயணைப்பு இணை இயக்குனர் அலுவலகம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த புதிய கட்டிடத்தின் தரைத்தளத்தில் 4 பெரிய தீயணைப்பு வாகனங்களை நிறுத்த இடவசதி உள்ளது.

கருவிகள், வாகனங்கள்

புதிய கட்டிடத்தின் முகப்பு தோற்றம் பிரமாண்டமாக அமைக் கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலை யங்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இது தவிர ஆனைமலை மற்றும் கருமத்தம்பட்டி ஆகிய இடங்களில் கூடுதலாக 2 தீயணைப்பு நிலையங்கள் கேட்டு உள்ளோம்.சமீபத்தில் தீயணைப்பு துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு சென்னை, கோவை உள்பட சில இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களது பயிற்சி காலம் முடிந்ததும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

புதிதாக உருவாக்கப் பட்ட தொண்டாமுத்தூர், கோவைப்புதூர் உள்ளிட்ட தீய ணைப்பு நிலையங்களுக்கு கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கருவிகள் கோரி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்