தார்சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தார்சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2022-07-02 15:01 GMT

பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டான்பட்டியில் இருந்து நிலக்கோட்டை செல்லும் ஒரு கிலோமீட்டர் தூரம் தார்சாலை, சேவுகம்பட்டி பிரிவில் இருந்து தோப்புப்பட்டி வரை செல்லும் 2 கி.மீட்டர் தூர தார்சாலை ஆகியவை சேதம் அடைந்தன. இந்த சாலைகளை, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணியை திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ், வத்தலக்குண்டு உதவிபொறியாளர் வீரன், உதவி பொறியாளர் யோகவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் தார்சாலை அமைக்கும் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்