தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: ரிப்பன் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்
சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.;
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் நிறைவடைது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழையை தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.