காங்கிரஸ் கட்சி கொடி அவமதிப்பு
பொள்ளாச்சி அருகே காங்கிரஸ் கட்சி கொடி அவமதிக்கப்பட்டது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கோட்டூர் மதுரை வீரன் கோவில் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பம் நேற்று காலையில் அவமதிக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.