தொழிலாளர் துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
தொழிலாளர் துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
சென்னை தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தலின்படி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தொழிலாளர் துறையின் ஆய்வுக்கு உட்பட்ட கடைகள், நிறுவனம், உணவு நிறுவனம், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், முடி திருத்தகம், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், பீடி நிறுவனம், மருத்துவமனை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களிலும் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர்துறையின் https://labour.tn.gov.in/ism/ என்ற வலைதளத்தில் அனைத்து நிறுவன வேலை அளிப்பவர்களும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.