மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-06-07 18:50 GMT

அரியலூர்:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றியோர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் 75 சதவீதம், அதற்கு மேல் கைகள், கால்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டோர் மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பெறும் மாற்றுத்திறனாளிகளை ேசர்ந்தவர்கள், வாழ்நாள் சான்று படிவத்தில் கிராம நிர்வாக அலுவலரின் சான்றொப்பத்துடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 17, தரைத்தளம், அரியலூர்-612704 என்ற முகவரிக்கு நேரில் வந்து வருகிற 25-ந் தேதிக்குள் சமர்ப்பித்து 2022-23-ம் நிதியாண்டிற்கான உதவித்தொகையை மாதந்தோறும் தொடர்ந்து பெற்று பயனடையலாம். வாழ்நாள் சான்று வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை தொடர்ந்து வழங்க இயலாது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்