இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம்

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் செல்போன் திருடி 2 போலீசார் சிக்கிய விவகாரத்தில், இன்ஸ்பெக்டரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2022-07-29 16:55 GMT

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் செல்போன் திருடி 2 போலீசார் சிக்கிய விவகாரத்தில், இன்ஸ்பெக்டரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செல்போன்களைதிருடி விற்ற போலீசார்

ராமநாதபுரம் ஆயுதப்படை போலீஸ்காரர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட 2 செல்போன்களை கேணிக்கரை போலீஸ் நிலைய எழுத்தர் சுரேஷ் மற்றும் ஏட்டு கமலக்கண்ணன் ஆகியோர் திருடி விற்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கண்ட 2 போலீசார் மீதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ்நிலைய எழுத்தர் சுரேஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் போலீசார் தரப்பில் இருந்தே கூறப்பட்டதை தொடர்ந்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

எனவே கேணிக்கரை போலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, உச்சிப்புளி போலீஸ் நிலையத்துக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உச்சிப்புளியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஆடிவேல், ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில்வாகனன் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்