ரெயில்களில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ரெயில்களில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-15 18:40 GMT

ரெயில்களில் சோதனை

குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை டி.ஜி.பி. வன்னியபெருமாள் நேற்று வேலூர் மாவட்ட அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

குறிப்பாக ரெயில் மூலம் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க பகல், இரவு நேரங்களில் அனைத்து ரெயில்களிலும் சோதனை செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

நிலுவை வழக்குகள்

மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார், இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இதையடுத்து அவர் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியை பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்