தாணிப்பாறை அடிவார பகுதிகளில் சுகாதார துறையினர் ஆய்வு

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி தாணிப்பாறை அடிவார பகுதிகளில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-07-25 19:09 GMT

வத்திராயிருப்பு, 

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி தாணிப்பாறை அடிவார பகுதிகளில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆடி அமாவாசை திருவிழா

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது.

இந்தநிலையில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சுகாதார துறை சார்பாக தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் பக்தர்கள் தங்கும் தோப்புகளில் உள்ள கிணறு மற்றும் நீர் நிலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் நீரின் தன்மை எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

தோப்புகளில் ஆய்வு

இந்த ஆய்வில் தோப்புகளில் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவற்றில் ஆய்வு செய்து குளோரினேசன் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு பணியில் சுகாதார துணை இயக்குனர் கலுசிவலிங்கம், நேர்முக உதவியாளர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுரு, சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், ஜெயபால், சரவணகுமார், கார்த்திக், ஸ்ரீநாத், ஆனந்த், லோகேஷ், பிச்சையா ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்