நாகையில் போலீசாரின் வாகனங்கள் ஆய்வு

நாகையில் போலீசாரின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

Update: 2023-08-07 19:30 GMT

நாகை மாவட்ட போலீஸ் துறைக்கு சொந்தமான வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பதவி ஏற்றதில் இருந்து மாதந்தோறும் இந்த வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் போலீசாரின் வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது டிரைவர்களிடம் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அவர், குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்