மீன் மார்க்கெட்டில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

மீன் மார்க்கெட்டில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர்.;

Update: 2023-06-18 18:45 GMT

திருவாரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஹேமச்சந்த காந்தி உத்தரவுப்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிள்ளிவளவன் வழிகாட்டுதல்படி முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், செந்தில், கதிரவன், பாலசண்முகம், விக்னேஷ் ஆகியோர் அடங்கிய சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் ஆசாத்நகர் மீன் மார்க்கெட்டுக்கு சென்ற சுகாதாரத்துறையினர் அங்கு சுத்தமாக உள்ளதா? என ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மீனவர்களிடமும், மீன்மார்க்கெட் நிர்வாகிகளிடமும் மார்க்கெட்டை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். முன்னதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம், புகையிலைப்பொருள் தடுப்புச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்