நிலக்கடலை, உளுந்து பயிர்களை வேளாண்மை விதை சான்று அலுவலர் ஆய்வு

சீர்காழி வட்டாரத்தில் நிலக்கடலை, உளுந்து பயிர்களை வேளாண்மை விதை சான்று அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2022-07-30 17:03 GMT

திருவெண்காடு:

சீர்காழி வட்டாரத்துக்குட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, உளுந்து, நெல் பயிர்களை வேளாண்மை துறை விதை சான்று அலுவலர் கனகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எம்பாவை கிராமத்தில் நிலக்கடலை செடிகளை பார்வையிட்டு அதில் ஏதேனும் கலப்பு விதை உள்ளதா/ என ஆய்வு செய்தார். பின்னர் மேல்நாங்கூர், எடக்குடி வடபாதி ஆகிய பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை பார்வையிட்டார். பின்னர் நெப்பத்தூர் கிராமத்தில் குறுவை நெல் வயலில் பார்வையிட்டார். அப்போது கூறுகையில், தமிழக வேளாண்மை துறை தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது என்றார். இந்த ஆய்வின்போது சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண்மை உதவி அலுவலர்கள் அசோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்