வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.;

Update: 2023-02-23 19:30 GMT

அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மற்றும் எரிசக்தி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா, கலெக்டர் ரமணசரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் அவர் காத்தங்குடிகாடு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் காவனூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட சோலார் அமைப்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு மோட்டார் பணியினையும், கடுகூரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார சுகாதார மைய கட்டிட கட்டுமான பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் கல்லங்குறிச்சியில் ரூ.7.72 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் பணியினையும், அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினையும், வாலாஜாநகரத்தில் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, அரியலூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். முன்னதாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்