ஆலங்குடி வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் ஆய்வு
ஆலங்குடி வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஆலங்குடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தையில், அழுகிய மீன்கள், பதப்படுத்தி சாப்பிடலாயக்கற்ற மீன்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, திருவரங்குளம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கசாமி, அறந்தாங்கி நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் ஆகியோர் நேற்று மாலை சந்தையில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன 25 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் அதனை பறிமுதல் செய்வதுடன், அபராதமும், கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.