அங்கன்வாடி மையத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

திமிரி அருகே பாழடைந்த அங்கன்வாடி மையத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்.;

Update: 2023-09-12 19:30 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் தி.புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பிண்டித்தாங்கல் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி மையம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் படித்து வருகின்றனர். மழை காலங்களில் கட்டிடத்தில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிந்து குழந்தைகள் அமர்ந்து படிக்க முடியாத அளவிற்கு உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு சமைப்பதற்காக வைக்கப்பட்ட அரிசி, பருப்புகளும் மழையில் நனைவதாகவும், உட்புற சுவற்றில் ஜன்னல்கள் அருகே விரிசல்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், ஜன்னல்கள் அருகில் புதர்கள் மண்டி இருப்பதால் விஷ ஜந்துக்கள் உலா வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்திருந்தனர்.

இதையடுத்து உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார். அன்படி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், உதவி பொறியாளர் கணேசன், பணி மேற்பார்வையாளர் கோமதி கலா ஆகியோர் நேற்று நேரில் சென்று கட்டிடத்தின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்