சோதனை சாவடியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சோளிங்கர் சோதனை சாவடியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-10-21 18:13 GMT

சோளிங்கர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பில்லாஞ்சி பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியை அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரிஷ் யாதவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சோதனை சாவடி கட்டிடம், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து சேதமடைந்துள்ள தடுப்பு கேட்டை சீரமைக்க உத்தரவிட்டார். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும், நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூடும்போது பொதுமக்களின் உடைமைகளை பாதுகாக்க ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்