செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருக்கழுக்குன்றத்தில் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு முதன்மை செயலாளருமான சமயமூர்த்தி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் சென்று அங்குள்ள இ- சேவை மையத்தில் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று ஆய்வு செய்தார்.;

Update: 2023-08-25 08:36 GMT

தொடர்ந்து அவர் திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் தலைமை டாக்டரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கொத்திமங்கலம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையம் சென்று குழந்தைகளில் வருகைகள் குறித்தும் குழந்தைகளின் வளர்ச்சிகள் மற்றும் குழந்தைகளின் சராசரி எடைகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ள உணவு கூடம் மற்றும் மேலப்பட்டு கிராமத்தில் உள்ள இயற்கை வேளாண்மை பண்ணை போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், வேளாண்மை துறை, வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்