சூளகிரி
சூளகிரி பகுதியில் தக்காளி பயிரிட்டிருந்த தக்காளி, அறுவடைக்கு தயாரான இருந்த நிலையில் நோய் தாக்கியது. இதனால் தக்காளி செடிகள் காய்ந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சிவசங்கரி மற்றும் அலுவலர்கள், தக்காளி தோட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும், நோய் தாக்கிய செடிகளையும், தக்காளிகளையும் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.