நர்சரிகளில் துணை இயக்குனர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நர்சரிகளில் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-27 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நர்சரிகளில் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

நர்சரிகளில் ஆய்வு

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், பழச்செடிகள், காய்கறிகள் பயிரிடும் பரப்பு அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான செடிகள், நாற்றுகளை பெற நர்சரிகளை அணுக வேண்டிய நிலை உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நர்சரிகளின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகளை விதை ஆய்வு துணை இயக்குனர்கள் மூலம் சிறப்பு பறக்கும்படை அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் கூறியதாவது:-

நர்சரி உரிமையாளர்கள் அனைவரும் விதைச்சான்றளிப்பு துறை மூலம் வழங்கும் நர்சரி உரிமம் பெற்று உள்ளனரா?, நர்சரி உரிமத்தை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்துள்ளனரா? என ஆய்வு செய்தனர். மேலும் நர்சரி உரிமையாளர்கள் விதை கொள்முதல் செய்யும் போது அதற்கான ரசிதை விதை விற்பனையாளர்களிடம் இருந்து பெற்று முறையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

அறிவுறுத்தல்

தொடர்ந்து நர்சரி உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு நாற்றுகள், பழச்செடிகளை விற்பனை செய்யும் போது அதற்கான ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறார்களா? என்றும், அதன் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தரமான பழச்செடிகள், காய்கறி செடிகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். அதற்கான ரசிது வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்