நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் விபத்து பகுதியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

Update: 2022-12-15 18:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சுமார் 450 பேர் விபத்தில் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் மாநில நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடப்பதை தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலைத்துறை மதிப்பீடு மற்றும் செயல்முறை துறையை சேர்ந்த அலுவலர்கள் 3 பேர் நேற்று நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலத்திற்குட்பட்ட திருச்சி சாலையில் வேப்பநத்தம், குப்புச்சிபாளையம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் சேலம் சாலை, துறையூர் சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இன்னும் 3 நாட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வின் போது தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்