அரூர்:
அரூரில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் விஜயா திடீரென ஆய்வு செய்தார். மேலும் பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சொட்டுநீர் பாசனம், தேசிய வேளாண் வளர்ச்சி இயக்க செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகள் பிரதம மந்திரி நிதி உதவியை தொடர்ந்து பெற தங்களது ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை அருகில் உள்ள தபால் நிலையம் மற்றும் இ-சேவை மையங்களுக்கு சென்று பதிவுகளை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்றார். ஆய்வின்போது வேளாண் உதவி இயக்குனர் சரோஜா மற்றும் குமார், கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.