எருமப்பட்டி:
எருமப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 7 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் எருமப்பட்டியில் உள்ள பட்டாசு கடைகளில் சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் கடைகளில் சீன தயாரிப்பு பட்டாசுகள் உள்ளனவா? என பார்வையிட்டார். மேலும் பட்டாசுகள் எங்கு கொள்முதல் செய்யப்பட்டது? என கடைக்காரர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது துணை தாசில்தார் பாரதிராஜா, எருமப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாலகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.