நெல் மூட்டைகளை கலெக்டர் சாந்தி ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்த நெல் மூட்டைகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்;

Update: 2022-09-06 17:22 GMT

டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்த நெல் மூட்டைகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

நெல் மூட்டைகள்

தர்மபுரி அருகே நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி வெற்றிலைக்காரன் பள்ளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள இந்த நெல் மூட்டைகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு பாதுகாப்புடன் தார்பாய்களை கொண்டு மூடி பராமரிக்க வேண்டும். அரசின் உத்தரவு வந்த பின்னர் அரிசி ஆலைகளுக்கு லாரிகளில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தர்மபுரி மண்டல மேலாளர் சரவணன், நல்லம்பள்ளி தாசில்தார் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் சாந்தி கூறியதாவது:-

18,500 மெட்ரிக் டன்

தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து வரப்பெற்ற நெல் மூட்டைகள் வெற்றிலைக்காரன் பள்ளத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 13,200 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் கடகத்தூர் அருகே பச்சனம்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 5,300 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு உள்ளன.

2 இடங்களிலும் மொத்தம் 18,500 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகள் நவீன பாலித்தீன் தார்பாய்கள் கொண்டு மூடி வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த நெல் மூட்டைகள் நெல் அரவைக்காக தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் அரவை செய்ய அனுமதி பெற்றுள்ள அரிசி ஆலைகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு கலெக்டர்கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்