வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை கலெக்டர் ஆய்வு

ஓசூர் அனுமந்த நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2022-08-30 17:48 GMT

ஓசூர்:

ஓசூர் அனுமந்த நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெள்ளப்பெருக்கு

ஓசூர் அனுமந்த நகர் பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோரம் உள்ள 12 வீடுகளுக்குள், 2 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. அந்த வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிக்கொண்டு உள்ள 10 முதல் 12 குடும்பத்தினருக்கு வருவாய் துறை மூலம் வேறு இடம் ஒதுக்கீடு செய்து வழங்கப்படும். மேலும் கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்று வெள்ளம் ஆற்றங்கரையில் ஏற்பட்டதில்லை. தாழ்வான பகுதியில் உள்ளவர்களை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, உடைகள் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுமனை

போர்க்கால அடிப்படையில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள 150 குடும்பங்களில் பெருமளவு பாதிப்புக்குள்ளான 12 குடும்பத்தினருக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்து வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அல்லது பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின்போது ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கவாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் பூபதி, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்