மொரப்பூர் பகுதியில்ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

Update: 2023-09-23 19:30 GMT

மொரப்பூர்:

மொரப்பூர் பஸ் நிலையம் சிந்தல்பாடி ரோடு, தர்மபுரி ரோடு, கம்பைநல்லூர் ரோடு மற்றும் கல்லாவி ரோடு பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஓட்டல்களில் பழைய இறைச்சி மற்றும் குளிர் பதன பெட்டியில் வைத்திருந்த சமைத்த காடை இறைச்சி, செயற்கை நிறமேற்றி மசாலா கலந்து வைத்திருந்த இறைச்சி உள்ளிட்ட 5 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஓட்டல்களில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய், காலாவதியான தயிர் பாக்கெட்டுகள், செயற்கை நிறமூட்டி பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாத 2 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்