கிருஷ்ணகிரி அருகேகுடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி அருகே குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;
கிருஷ்ணகிரி
மத்திய அரசின் ஜல்சக்தி மிஷன் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து புதுடெல்லியில் இருந்து ஜல்சக்தி மிஷன் அதிகாரிகளான சிசியால்பால்சேட்டி, கன்சான்பாக் அகமத் ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இதில், மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரின் தரம், குளோரினேசன் செய்தல், பாதுகாப்பான குடிநீர் தடையின்றி வழங்குதல் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் குடிநீரின் தரம் பரிசோதனை செய்து வரும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் பணிகளையும் பார்வையிட்டனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குடிநீரை, கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் குடிநீர் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர் லோகநாதன், உதவி நிர்வாகப் பொறியாளர் ரகோத்சிங், இளநிலை நீர் பகுப்பாய்வாளர் சுரேஷ், ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் தாமரை மகளிர் கூட்டமைப்பின் நிர்வாகி திவ்யா ஆகியோர் உடன் இருந்தனர்.