மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில்வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு

Update: 2023-07-22 19:00 GMT

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள், விபத்து நடைபெற வாய்ப்புள்ள இடங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் வாகன ஆய்வாளர் பாமபிரியா, வேலகவுண்டம்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாணிக்கம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பிரதான சாலையின் நடுவே சென்ட்ரல் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விபத்துகளை தடுக்கும் வகையில் பிரதான சாலையின் இரு மார்க்கத்திலும் சிக்னல் விளக்குகள் அமைக்கவும், இரு பக்கவாட்டு சாலைகளில் சாலை சந்திப்பு அருகே சிக்னல்கள் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்.

அப்போது மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் அரசு, தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை என்று புகார் கூறப்பட்டது. இதையடுத்து நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு செல்லாத பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் அனுமதி சான்று மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்