வாய்க்கால் கதவணையை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

குறுவை பயிர்கள் நீரில் மூழ்குவதால் வாய்க்கால் கதவணையை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-திருமருகல் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-08-16 18:45 GMT

திட்டச்சேரி:

குறுவை பயிர்கள் நீரில் மூழ்குவதால் வாய்க்கால் கதவணையை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-திருமருகல் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறுவை சாகுபடி

திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி திருமாளம் பொய்கையில் சுமார் 100 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆழியான் வாய்க்காலில் கதவணையை திறக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூடியே வைத்திருப்பதாகவும், இதனால் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஆழியான் வாய்க்கால் கதவணையை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி, திருப்பயத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆழியான் வாய்க்கால் கதவணையை உடனே திறப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர்-திருமருகல் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்