உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி

மெலட்டூர் பகுதியில் உளுந்து பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-06-10 19:55 GMT

மெலட்டூர்;

மெலட்டூர் பகுதியில் உளுந்து பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பூச்சிக்கொல்லி மருந்து

பாபநாசம் தாலுகா மெலட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சாகுபடியாக பல ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிர்கள், பூ பூத்து காய் காய்க்கும் தருவாயில் செம்பேன் காய்புழுவால் உளுந்து பயிர்கள்பாதிக்கப்பட்டு வருகிறது. பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை விவசாயிகள் தெளித்து வருகின்றனர்.

செலவு

மேலும் விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறை மற்றும் ஆட்கள் கூலி உயர்வு காரணமாக டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-தனியார் டிரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏக்கருக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை செலவு ஆகிறது. எனவே விவசாயிகளுக்கு வேளாண்மைதுறை மூலம் இலவசமாக அல்லது மானிய முறையில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்