மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2023-08-02 17:54 GMT

தோகைமலை அருகே உள்ள கொசூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 24). இவர் சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் பாளையம்-தோகைமலை மெயின் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கவுண்டம்பட்டியை சேர்ந்த துரைசாமி (55) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பாலமுருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலமுருகன் தோகைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்