பள்ளி மாணவர்களுக்கான மனநல நல்லாதரவு மன்றங்கள் தொடக்கம்

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவர்களுக்கான மனநல நல்லாதரவு மன்றங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-22 17:42 GMT

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவர்களுக்கான மனநல நல்லாதரவு மன்றங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மனநல நல்லாதரவு மன்றங்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் 'மனநல நல்லாதரவு மன்றங்கள் மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை (14416)' திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு பயிற்சி கையேட்டினையும் வழங்கினார். மருத்துவப்பணிகள் இணைஇயக்குனர் கண்ணகி, சுகாதார பணிகள் துணைஇயக்குனர் பானுமதி, கல்லூரி டீன் திருமால்பாபு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஆலோசனைகள்

இந்த திட்டத்தின்மூலம் பள்ளி ேதர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் தற்கொலை செய்வதை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது. மேலும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி விரக்தியடையும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.

இதற்காக அரசு அறிவித்துள்ள 14416 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு மாணவர்கள் தங்கள் பிரச்சினை குறித்து ஆலோசனை பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில் மருத்துவமனை வளாகத்தின் முன்பு இடையூறு இல்லாமல் கடைகள் வைக்க அதிகாரிகள் ஆய்வு செய்ய ஒரு வாரம் காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான ஷீட் அமைத்து கடைகள் அமைக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான நிரந்தர தீர்வு காணப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்