உண்மை தகவல்களை மறைத்து வாரிசு சான்றிதழ்; அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு

பொய் தகவல்களைக் கூறி வாரிசு சான்றிதழ் பெற்று சொத்துகளை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update:2024-05-14 22:40 IST
உண்மை தகவல்களை மறைத்து வாரிசு சான்றிதழ்; அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,

வாரிசு சான்றிதழ் விவகாரத்தில் மேட்டுப்பாளையம் தாசில்தார் உத்தரவை எதிர்த்து மாரண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொய் தகவல்களைக் கூறியும், உண்மையை மறைத்தும், வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று பெற்று சொத்துகளை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார். உண்மை தகவல்களை மறைத்து வாரிசு சான்று கோரி விண்ணப்பிப்பது தொடர்பான வழக்குகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதி, இதுபோல் குற்ற வழக்கு தொடராமல் உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்