ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்

பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.;

Update:2023-03-09 00:15 IST

பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

மாணவி பலாத்காரம்

பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர் அவைத்தலைவருமான சிகாமணி, புதுமலர் பிரபாகர், ராஜாமுகமது மற்றும் உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுபரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.றித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் கேட்டபோது கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட சிறுமி ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டிடம் முழுமையான வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாரும் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரிக்கும் வகையில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மூலம் தனியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

குற்றப்பத்திரிகை

இந்த சம்பவத்தில் வாட்ஸ்அப்பில் வெளியான ஆடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் தண்டனை வாங்கி கொடுப்பதில் உறுதியாக உள்ளோம். இதற்கேற்ப ஒரு மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று மாவட்டத்தில் வேறு யாருக்காவது கொடுமை நடந்திருந்தால் தைரியமாக அச்சமின்றி என்னிடம் புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்