சபரிமலை பக்தர்களுக்கு தகவல் மையம்

தேனி அருகே வீரபாண்டியில் சபரிமலை பக்தர்களுக்கு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.;

Update:2022-11-22 00:15 IST

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய மலைப்பாதைகள் வழியாக கேரள மாநிலம் சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தேனி அருகேயுள்ள வீரபாண்டியில் சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த தகவலை பக்தர்கள் தெரிந்து கொள்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. மேலும் இந்த மையத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு தேவையான அவசர உதவி போன் எண்கள், முதலுதவி மையங்கள் மற்றும் வரைபடம் போன்ற தகவல்களை துண்டு பிரசுரங்களாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்