ஆயுள்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்

ஆயுள்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கூறினார்.;

Update: 2022-12-16 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன்அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்திய அஞ்சல்துறை, அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறைந்த பிரீமியம், அதிக போனஸ் ஆகிய சிறப்பம்சங்கள் இதில் உள்ளதால் ஏராளமான மக்கள் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வருகின்றனர். அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எந்தவொரு பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களும் சேர்ந்து பயன்பெறலாம். அனைத்து தபால் அலுவலகங்களிலும் இதற்கான பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது. தற்போது கூடுதலாக எந்த ஒரு வங்கி கணக்கு வைத்திருந்தாலும் இணையதள பரிவர்த்தனை (ஆன்லைன்) அஞ்சல்துறையின் ஏ.டி.எம். மூலமும், அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் இருந்து ஆட்டோடெபிட் வசதி மூலமாகவும், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் செல்போன் செயலி மூலமும் பிரீமியம் செலுத்தும் வசதியை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்