வேலூர் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்தது

மாண்டஸ் புயலினால் வேலூர் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்தது.

Update: 2022-12-11 13:17 GMT

வேலூர் மக்கான் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமைகளில் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனையும், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் 100 டன் வரை மீன்கள் விற்பனையும் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த மீன்வகைகளை வாங்கி சென்றனர். கடந்த வாரத்தை போன்றே மீன்களின் விலை காணப்பட்டது. விலையில் பெரிதாக மாற்றம் இல்லை. பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,100 வரையும், நடுத்தர வஞ்சிரம் ரூ.600-க்கும், சிறிய வஞ்சிரம் ரூ.350 -க்கும், சங்கரா மீன் ரூ.300-க்கும், இறால் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையும், நண்டு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையும், கட்லா ரூ.160 முதல் ரூ.180 வரையும், பாறை ரூ.500-க்கும், மத்தி ரூ.120-க்கும் விற்பனையானது. மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதனால் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. ஆனாலும் மீன்களின் விலை அதிகரிக்கவில்லை என்று மீன்வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்