தேங்காய், பாக்கு மறைமுக ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், பாக்கு மறைமுக ஏலம் நடைபெற்றது.;

Update: 2023-09-22 21:15 GMT

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், பாக்கு, வாழைத்தார் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு மறைமுக ஏலம் நடைபெற்றது. ஆனைமலை ஒன்றியத்தை சேர்ந்த 9 விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் இருந்து 43 தேங்காய் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். ஆனைமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 4 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

தேங்காய் கிலோவிற்கு 15 ரூபாயில் இருந்து 24 ரூபாய் வரை ஏலம் சென்றது. இதேபோன்று 1 விவசாயி 4 மூட்டை பாக்கு கொண்டு வந்தார். அதனை 4 வியாபாரிகள் கிலோவுக்கு 315 ரூபாயில் இருந்து 385 ரூபாய் வரை கொடுத்து ஏலத்தில் வாங்கி சென்றனர். வாழைத்தார் ஏலத்தில் ஆனைமலை பகுதியை சேர்ந்த 6 விவசாயிகள் ரோபஸ்டா, நேந்திரம் என 2 வகையான 92 வாழைத்தார்களை கொண்டு வந்தனர். அதனை 7 வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு வாங்கி சென்றனர். இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரி செந்தில் முருகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்