'அக்னிபத்' திட்ட நகலை எரிக்க முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர்
இந்திய மாணவர் சங்கத்தினர் ‘அக்னிபத்’ திட்ட நகலை எரிக்க முயன்றனர்.;
ராணுவத்தில் 'அக்னிபத்' திட்டத்தில் ஆள் சேர்ப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் சந்தோஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மகாதீர், மகாலட்சுமி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது அக்னிபத் திட்ட நகலை எரிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.