இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-09-21 18:45 GMT

விழுப்புரம்

இந்திய குடியரசு கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். செயலாளர் சேவகன், கிரிஸ்டோ மணிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார் கலந்து கொண்டு பேசினார். புதுடெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை சூட்டிட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஆட்டோ செல்லா, பொருளாளர் முருகன், பொறுப்பாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ஓவியர் அழகிரி, சம்பத், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்