ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து கோத்தகிரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து கோத்தகிரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2023-02-02 18:45 GMT

கோத்தகிரி

குஜராத் கலவரம் குறித்த பி.பி.சி ஊடகம் வெளியிட்ட ஆவண படத்தை மத்திய அரசு தடை செய்தது. மேலும் இந்த ஆவண படத்தை திரையிடுபவர்கள் மற்றும் பார்ப்பவர்கள் கைது செய்யப் படுகின்றனர். இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாகமும், இந்த ஆவண படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன், தாலுகா செயலாளர் பகத்சிங், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் யோகராஜ், தாலுகா செயலாளர் சச்சின், தலைவர் சுகந்தம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், மக்கள் அதிகாரம் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்